லடாக்கில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!
லடாக் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
லடாக் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடர்ந்து மேலும் சில பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
லடாக் சென்றுள்ள அவர் அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து நேற்று(திங்கள்கிழமை) லே பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
'சீன ராணுவத்தால் இந்தியாவின் ஒரு அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என்ற மத்திய அரசின் கூற்று பொய்யானது, சீனப் படைகள் ஊடுருவி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததாக உள்ளூர் மக்களே கூறுகின்றனர், இது கவலைக்குரிய விஷயம்' என்று தெரிவித்தார்.
முன்னதாக, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.