மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வி
துய்சாங்கில் தொகுதியில் போட்டியிட்ட மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வியை சந்தித்துள்ளார்.
துய்சாங்கில் தொகுதியில் போட்டியிட்ட மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வியை சந்தித்துள்ளார்.
மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 13 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் 26 இடங்களில் சோரம் மக்கள் இயக்கம் முன்னணி (இசட்.பி.எம்.) வகிக்கிறது.
மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எஃப்.) 10 இடங்களிலும், பாஜக 3 மற்றும் காங்கிரஸ் ஒரு இடங்களிலும் முன்னணி வகித்து வருகின்றன. இந்த நிலையில் துய்சாங்கில் தொகுதியில் எம்என்எஃப் சார்பில் போட்டியிட்ட மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா தோல்வியை சந்தித்துள்ளார்.
Advertisement
Advertisement
சோரம் மக்கள் இயக்கத்தின் (இசட்பிஎம்) வேட்பாளர் டபிள்யூ சுவானாவ்மா 6,988 வாக்குகளும் மிசோ தேசிய முன்னணியின் (எம்என்எஃப்) தவ்லூயா 6,079 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 1,674 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 67 வாக்குகளும் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.