அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு இன்று புறப்பட்டது!
அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு இன்று தெற்கு காஷ்மீரில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழு இன்று தெற்கு காஷ்மீரில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையின் மூன்று நாளில் இதுவரை 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். இந்நிலையில் 4,758 பேர் அடங்கிய நான்காவது குழு இன்று புறப்பட்டுள்ளது.
எட்டு பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வானத்துடன் அதிகாலை 3.40 மணி முதல் 4.10 மணி வரை ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நான்காவது அமர்நாத் பயணிகளின் குழு புறப்பட்டுச் சென்றது. அதில், 3,030 பயணிகள் பஹல்காம் வழியாகவும், 1,728 பயணிகள் பால்டால் வழியாகவும் சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement
முன்னதாக, கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜென்ரல் முகேஷ் சிங் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்பன் மாவட்டத்திற்குச் சென்று பனிஹாலில் உள்ள முகாமில் பாதுகாப்பை ஆய்வு செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.