FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

'சிபிஐ காவலில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை' - மணீஷ் சிசோடியா

தன்னை சிபிஐ காவலில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

7 பிப்ரவரி 2024, 12:09 pm IST
பகிர்:

தன்னை சிபிஐ காவலில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை என்று மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை(பிப். 26) கைது செய்தது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் (மார்ச் 4 வரை) சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. அதன்படி அவருடைய காவல் இன்று முடிவடைவதால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. 

இதனிடையே, ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தரப்பு மனுவை விசாரித்த  உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததுடன், தில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதன்படி ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'கைதுக்கு முன்னதாகவே சிபிஐ விசாரணைக்கு அழைத்தபோது முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டது. எனவே, தன்னை காவலில் வைத்திருப்பதன் மூலமாக எந்த பயனும் இல்லை' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments