முகப்பு
இந்தியா

ஒரு குடும்பமே உயர்ந்தது எனக் கருதும் காங்கிரஸ்: ராஜ்நாத் சிங்

"மக்களே உயர்ந்தவர்கள் என்று பாஜக கருதுகிறது; ஆனால் ஒரு குடும்பமே உயர்ந்தது என்று காங்கிரஸ் கருதுகிறது' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Updated On : 8 ஏப்ரல் 2024, 4:15 am IST
பகிர்:

"மக்களே உயர்ந்தவர்கள் என்று பாஜக கருதுகிறது; ஆனால் ஒரு குடும்பமே உயர்ந்தது என்று காங்கிரஸ் கருதுகிறது' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம், பிகானீரில் பாஜக வேட்பாளர் அர்ஜுன் ராம் மேக்வாலை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மோடியின் அரசியல் செயல்பாடு அற்புதமாக உள்ளது. மக்களே உயர்ந்தவர்கள் என்று நாங்கள் (பாஜகவினர்) கருதுகிறோம். ஆனால் ஒரு குடும்பமே உயர்ந்தது என்று காங்கிரஸ் கருதுகிறது.

Advertisement

Advertisement

நம் நாட்டின் முப்படைகளின் ஆற்றல் குறித்தும் வீரதீரம் குறித்தும் காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியது கண்டு வேதனை அடைந்தேன்.

நமது ராணுவ வீரர்களை காங்கிரஸ் கேள்வி கேட்கிறது. நமது ராணுவத்தினர் பாகிஸ்தானில் நடத்திய துல்லியத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸôர் ஆதாரங்களைக் கேட்டனர். இத்தாக்குதல் தொடர்பாக ஒட்டுமொத்த உலகுக்கும் ஆதாரம் கிடைத்தது; காங்கிரஸýக்கு மட்டும் அந்த ஆதாரம் கிடைக்கவில்லை.

"ஒரே நாடு - ஒரே தேர்தல்' முன்முயற்சியால் பணம், நேரம், நாட்டின் வளங்கள் ஆகியவை சேமிக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் வழக்கம் போல் காங்கிரஸ் இதையும் எதிர்க்கிறது.

வரும் 2027ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்றார்.

ஜம்மு-காஷ்மீரில் உரி பகுதியல் இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் மண்ணில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29இல் துல்லியத் தாக்குதலை நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments