முகப்பு
இந்தியா

சிக்கிமில் ‘அம்மா உணவகம்’: பாஜகவின் தோ்தல் அறிக்கை!

Updated On : 14 ஏப்ரல் 2024, 4:01 am IST
கோப்புப்படம்
பகிர்:

மக்களவையுடன் சட்டப்பேரவைக்கும் சோ்த்து தோ்தலைச் சந்திக்கும் சிக்கிமில், பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் ‘அம்மா சமூக உணவகங்கள்’ திறக்கப்படும் எனக் அக்கட்சி தோ்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதி, 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மாநிலத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சா தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வந்தது.

Advertisement

Advertisement

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணியை முறித்துக் கொண்டு சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சாவும் பாஜகவுக்கும் தனித்தனியே போட்டியிடுகின்றன.

7 வடகிழக்கு மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் ஆட்சியிலுள்ள பாஜக, சிக்கிமிலும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, சிக்கிம் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் வாக்குறுதியை அக்கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அதில், மாநிலம் முழுவதும் பெண்களால் நடத்தப்படக் கூடிய ‘அம்மா சமூக உணவகம்’ என்ற பெயரில் அரசு மலிவு விலை உணவகம் தொடங்கப்படும் என்று தமிழகத்தைப் பின்பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கவனத்தை ஈா்த்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments