FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட12 பேருக்கு உடல்நலம் பாதிப்பு.

29 ஏப்ரல் 2024, 2:01 pm IST
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு கோரேகானின் சந்தோஷ் நகர் பகுதியில் சட்டிலைட் டவரில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட நிலையில், ஒவ்வாமை ஏற்பட்டு 12 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல்கட்ட சிகிச்சையளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 12 பேரில் 9 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திருப்பினர். மேலும் மூவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பிரிஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறினார்

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது வேறெதேனும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments