பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!
ஜார்க்கண்டில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலியான நிலையில் 43 -க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலியான நிலையில் 43 -க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் உள்ள பத்தோ - குமார்கரியா என்கிற கிராமத்தில் பானி பூரி விற்பவரிடம் அங்குள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதில், ராம் கிஷோர் வர்மா என்பவரின் 6 வயது மகன் ரஞ்சன் குமார் அவனது தாய் மற்றும் சகோதரனுடன் பானி பூரி சாப்பிட்டுள்ளான். இதனைத் தொடர்ந்து, மூவருக்கும் வாந்தி, வயிற்று வலி, தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Advertisement
சிறிது நேரத்திலேயே கிராமத்தில் உள்ள பலருக்கும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அந்தக் கிராமம் முழுவதும் பதற்றம் நிலவியுள்ளது. அங்குள்ள சதார் மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுவன் ரஞ்சன் குமார், சிகிச்சை பலனின்றி பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அச்சிறுவனின் தாயார் ரிங்கி தேவி (40) மற்றும் சகோதரன் பிரின்ஸ் குமார் (11) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிராம வட்டார வளர்ச்சி அதிகாரி கணேஷ் ராஜக் அவைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, பானி பூரி விற்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. உணவுப் பாதுகாப்புத் துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.