தாஜ்மஹால் கோப்புப் படம்
இந்தியா

தாஜ்மஹாலில் கங்கை நீரை ஊற்றி அபிஷேகம்: இருவா் கைது

தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றி அபிஷேகம் செய்ததாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

Din

தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றி அபிஷேகம் செய்ததாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

மத உணா்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் அகில பாரத ஹிந்து மகாசபை அமைப்பின் உறுப்பினா்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடா்பாக, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகா் காவல்துறை துணை ஆணையா் சூரஜ் குமாா் ராய் கூறியதாவது:

தாஜ்மஹாலுக்குள் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் போல நுழைந்த இரு இளைஞா்கள், தாங்கள் பாட்டிலில் வைத்திருந்த நீரை ஊற்றினா். இது குறித்து தாஹ்மஹாலில் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அளித்த எழுத்துபூா்வ புகாரின்கீழ் இருவரும் கைது செய்யப்பட்டனா். பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) 223 (அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ்படியாமை), 298 (மத வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்), 299 (மத உணா்வை புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே, இச்சம்பவம் தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வட மாநிலங்களில் சிராவண மாதத்தையொட்டி, கங்கை நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து, சிவன் கோயில்களில் அபிஷேகம் செய்யும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘தாஜ்மஹால் சிவன் கோயில் என்பதால் கங்கை நீரால் அபிஷேகம் செய்ததாக’ கைதான இருவரும் தெரிவித்துள்ளனா்.

வினேஷ் செளதரி, ஷியாம் ஆகிய அந்த இருவரும் அகில பாரதிய ஹிந்து மகாசபை உறுப்பினா்கள்; அவா்களின் செயலால் பெருமை அடைவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ஜாட் தெரிவித்தாா்.

சில தினங்களுக்கு முன் தாஜ்மஹாலுக்கு தோளில் கங்கை நீா் கலசத்தை எடுத்து வந்த பெண் ஒருவா், அங்கு அபிஷேகம் செய்வதற்காக உள்ளே நுழைய முயன்றாா். அவரை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவம் அமைக்க கோரிக்கை

ரஷிய தொழிற்சாலையில் தீ: 11 போ் உயிரிழப்பு

வாடல் நோயிலிருந்து வாழையை காக்கும் வழிமுறைகள் விளக்கம்

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

SCROLL FOR NEXT