கொட்டகையில் இருந்து ரயில் என்ஜின் மீது குதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி!
உத்தரப் பிரதேசத்தில் தகர கொட்டகையில் இருந்து ரயில் என்ஜின் மீது குதித்த நபர் மின்சாரம் பாய்ந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தகர கொட்டகையில் இருந்து ரயில் என்ஜின் மீது குதித்த நபர் மின்சாரம் பாய்ந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ராணி லட்சுமிபாய் ரயில்வே சந்திப்பின் நடைமேடை1இல் கோவா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை இரவு நின்றுள்ளது.
இந்த நிலையில் நடைமேடையில் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில் இருந்து ரயில் என்ஜின் மீது சுமார் 40-45 வயதுடைய ஒருவர் திடீரென குதித்துள்ளார்.
Advertisement
Advertisement
பிரம்மயுகம் இயக்குநர் படத்தில் பிரணவ் மோகன்லால்!
இதில் மின்சாரம் பாய்ந்து அவர் பலியானதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் ரயில்வே காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை துண்டித்து உடலை கீழே இறக்கினர்.
பின்னர் அந்த உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால், கோவா எக்ஸ்பிரஸ் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.