இந்தியா

மோடி வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் காஷ்மீர்!

DIN

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி செவ்வாயன்று (பிப்.20) ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரிருக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காஷ்மீரில், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், பிரதமரின் இந்த பயணத்தின்போது, ஜம்முவில் உள்ள சேனாப் ஆற்றின் மேலே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜம்முவில் மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிலையில், காஷ்மீரில் பல்வேறு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாத சதி வேலைகள் எதுவும் நடைபெறாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

இன்று அமோகமான நாள்!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று நல்ல நாள்!

பரோடா வங்கி நிகர லாபம் ரூ.4,886 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT