முகப்பு
இந்தியா

வயநாடு, ரே பரேலியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை!

வயநாடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் ராகுல்காந்தி.

Updated On : 4 ஜூன் 2024, 3:52 pm IST
rahul
பகிர்:

கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது 3 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் உள்ளார்.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றம் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர்கள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

Advertisement

Advertisement

வயநாடு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ராகுல் காந்தி 63,05,43 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் 3,54,728 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அன்னி ராஜா 2.68,256 வாக்குகளைப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேந்திரன் 135947 வாக்குகளைப் பெற்றுக் கிட்டத்தட்ட ராகுலைவிட 4,72,550 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ராகுல் காந்தி ரே பரேலி தொகுதியிலும் 5,57,005 லட்சம் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து களம் கண்டுள்ள பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் 2,50,261 ஓட்டுகளைப் பெற்று பின்தங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments