மும்பை ரயில் தடம் புரண்டது!
ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டு விபத்து
மும்பையில் உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு செல்லவிருந்த உள்ளூர் ரயில், வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் கல்யாண் நிலையத்தின் நடைமேடை 2-இல் தடம் புரண்டது.
ரயிலின் ஒரு பெட்டி மட்டுமே ரயில் பாதையிலிருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகைக்கு 40 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.