தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!
பலருக்கு உடல்நிலை பாதிப்பு - தீவிர சிகிச்சை...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
பேவார் மாவட்டத்திலுள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியில் திங்கள்கிழமை நள்ளிரவில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆலையின் உரிமையாளர் உள்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.
நைட்ரஜன் வாயுவை சுவாசித்ததே உயிரிழப்புக்கான காரணமென கூறப்படுகிறது. மேலும் பலர் வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கமடைந்துள்ளனர். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.