அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறித்து...
சென்னை: திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபோ் கிராமத்தில் தனியாா் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை எதிா்பாராதவிதமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், அங்கு பணியில் இருந்த 64 நபா்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) பாதிக்கப்பட்டனா்.
அதில் துரதிருஷ்டவசமாக 2 பெண்கள் பலியாகினர். 15 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், 23 பேர் தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், 24 பேர் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமோனியா வாயு கசிவால் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் 140 பேரில் 2 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
இதனிடையே, அமோனியா வாயு கசிவு பதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Regarding the rise in the death toll to four in the ammonia gas leak accident...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.