முகப்பு
இந்தியா

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 4 ஏப்ரல் 2025, 8:16 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்கிழமை மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரூபேஷ் பாஸ்வான், பப்லூ குமார் மற்றும் உதய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

கைதான அனைவரும் கயாவில் பிப்ரவரியில் இறந்துகிடந்த மாவோயிஸ்ட் மண்டல தளபதி விவேக் யாதவிடம் பணிபுரிந்தவர்கள்.

ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், சுமார் 5 கிலோ எடையுள்ள கேன் குண்டு, கம்பிகளுடன் ஆறு டெட்டனேட்டர்கள் என ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட காவல்துறையுடன் ஒருங்கிணைந்து, கடந்த 15 நாள்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 நக்சலைட்டுகளை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments