FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால்: மத்திய அரசு தகவல்

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது.

5 ஏப்ரல் 2025, 3:30 am IST
தாஜ்மஹால் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில் தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 5 ஆண்டுகளில் நுழைவுக் கட்டணமாக ரூ.297 கோடி கிடைத்துள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட பொதுமக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கடந்த 5 ஆண்டுகளாக தாஜ்மஹால் முதலிடத்தில் உள்ளது. 5 ஆண்டுகளில் தாஜ்மஹாலைப் பாா்வையிட ரூ.297 கோடி நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

2023-24 நிதியாண்டில் தில்லியில் உள்ள குதுப்மினாா் ரூ.23.80 கோடி நுழைவுக் கட்டணம் ஈட்டி இரண்டாவது இடத்திலும் தில்லி செங்கோட்டை ரூ.18.08 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மாமல்லபுரம்: 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் கட்டணம் மூலம் அதிக வருவாய் ஈட்டியதில் தாஜ்மஹாலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தது. ஒடிஸா மாநிலம் கோனாா்க்கில் உள்ள சூரியனாா் கோயில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

2019-20 நிதியாண்டில் ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்திலும், குதுப்மினாா் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments