முதியோர் சமூகமாக மாறுகிறது தமிழ்நாடு! 71% முதியோர்களே!
நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17% ஆக உள்ளது.
நாட்டிலேயே முதியோர் விகிதம் வேகமாக அதிகரித்துவரும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவருவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) தெரிவித்தார்.
நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17% ஆக உள்ளது.
தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார். வெள்ளை அறிக்கை வெளியிட்டு அது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement
இதில், முதியோர் வளர்ச்சி விகிதம் குறித்து அமைச்சர் பேசியதாவது:
முதியோர் சமூகமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இது மற்றொரு சவாலாக உள்ளது. நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ளது.
2021ஆம் ஆண்டில் 66.4% ஆக இருந்த உழைக்கும் வயதுடையோர் (15 - 59) மக்கள் தொகை 2036-ல் 63.3% ஆக குறையும். மக்கள் தொகை பரிமாணத்தின்படி பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும் முன்னரே முதுமையடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நலத் திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது. அதற்கு இணையாக வருவாய் பெருக்கம் இல்லை. 2026 - 2027 இடைக்கால பட்ஜெட்டில் மாநில சொந்த வரி வருவாய் ரூ. 2,29,579 கோடியாக உள்ளது. தற்போதைய சூழலில் ரூ. 215600 கோடியாக உள்ளது.
உயர்கல்வித் தொகை, சமூக பாதுகாப்பு திட்டங்களும் வருவாய் பெருக்க நடவடிக்கையின்றி கொண்டு வந்தனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை வருவாய் பெருக்க நடவடிக்கையின்றி மேற்கொள்ளப்பட்டவை. இத்தகைய சிறப்புத் திட்டங்களால் அரசுக்கு ரூ. 25,000 கோடி செலவாகிறது.
Tamil Nadu is transforming into an aging society! 71% are elderly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.