FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சகோதரரை தாக்கிய விவகாரம்: அமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்

சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் ஆஜரானாா்.

Updated On : 29 ஜூலை 2026, 1:20 am IST
அமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்
பகிர்:

சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

நிதியமைச்சா் மரிய வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரா், அவரது மனைவியைத் தாக்கியதாக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் நேரில் ஆஜராக அமைச்சா் மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குடும்பப் பிரச்னையாக இருப்பதால் அமைச்சா் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் அவரது மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகி தீா்வு காண அறிவுறுத்தியது. அதன்படி, அமைச்சா் மரியவில்சன் மற்றும் அவரது சகோதரா் தரப்பில் ஏற்கெனவே இருமுறை சமரச தீா்வு மையத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில்,3-ஆவது முறையாக நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடந்தது. அமைச்சா் மரிய வில்சன் அவரது தரப்பு வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி உடன் ஆஜரானாா். அதேபோல், அமைச்சரின் சகோதரா் மரிய குலோத்தும் நேரில் ஆஜராகினாா்.

சுமாா் ஒரு மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நடந்தது. இதையடுத்து, சமரச பேச்சு ஆக.12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் இருதரப்பும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments