முன்னாள் எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்!
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளது குறித்து...
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரான ஜகதீப் தன்கர், கடந்த 1993 முதல் 1998 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷான்கார் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார்.
அதன்பின்னர், 2019 ஆம் ஆண்டு வரை ஜகதீப் தன்கருக்கு வழங்கப்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியமானது, அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஜகதீப் தன்கர், உடல் நலக் குறைவினால் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தனது குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், 2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை மீண்டும் தனக்கு வழங்க வேண்டுமென ராஜஸ்தான் அரசிடம் அவர் விண்ணப்பித்துள்ளார்.
அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அம்மாநில தலைமைச் செயலகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, மாதம் ரூ.35,000 வரையில் வழங்கப்படும் ஓய்வூதியமானது அவர்கள் 70 வயதை அடைந்தவுடன் அதில் 20 சதவிகிதம் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், தற்போது 74 வயதாகும் ஜகதீப் தன்கருக்கு மாதம் ரூ.42,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர் திட்டமிடப்பட்டது எவ்வாறு? புதிய விடியோக்கள் வெளியீடு
Former Vice President Jagdeep Dhankhar has reportedly applied for a pension for a former member of the Rajasthan Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.