அண்ணா பிறந்த நாளில் அண்ணாமலை கட்சி தொடங்குகிறாரா?
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி தொடங்கும் தேதி பற்றி...
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கட்சியை முறைப்படி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத தொடக்கத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலை, இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை தொடங்குவதாக அறிவித்தார்.
தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான தளத்தையும் அவர் அறிவித்திருந்த நிலையில், முதல் நாளே லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.
Advertisement
Advertisement
இதுவரை (ஜூன் 15, பகல் 2 மணி) 17.95 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மேலும், பாஜக நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி, அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டுவந்து, பிறகு அரசியல் சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன் என்றும், 2029 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி, அண்ணாமலை தனது கட்சியை முறைப்படி தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Is Annamalai launching a party on Anna's birthday?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.