முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொலை: 2 வீரர்கள் காயம்

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 29 மார்ச் 2025, 3:53 pm IST
என்கவுன்டர் நடந்த பகுதி.
பகிர்:

சத்தீஸ்கரின் சுக்மாவில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் நேற்று முதல் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில சனிக்கிழமை காலை கெர்லாபால் காவல் நிலைய எல்லைக்குள் நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது 16 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களும் மீட்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது என்று மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார். துப்பாக்கிச் சண்டையின் போது இரண்டு வீரர்களும் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

ஆனால் அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த ஆண்டு, சத்தீஸ்கரில் நடந்த பல்வேறு என்கவுன்டர்களில் இதுவரை 132 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பஸ்தர் பிரிவில் மட்டும் 116 பேர் கொல்லப்பட்டனர். அதேசமயம் தந்தேவாடாவில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டர் பஸ்தர் பிரிவில் இந்த மாதத்தில் நடக்கும் ஐந்தாவது என்கவுன்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments