FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:48 am IST
பாகிஸ்தான். - கோப்புப்படம்.
பகிர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

மாகாணத்தின் அட்டாக் மாவட்ட எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும், அவா்கள் வசமிருந்த ஆயுத, வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments