பாகிஸ்தானில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் மீது கடந்த சில நாள்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டு கூட்டுப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இறந்த 42 பேரின் குடும்பத்தினரை பலூசிஸ்தான் தலைநகா் குவெட்டாவுக்கு நேரில் சென்று சந்தித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், உயிரிழந்தவா்களின் தியாகம் வீண் போகாது என்றும், இதற்குக் காரணமானவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்றும் உறுதியளித்திருந்தாா்.
பாகிஸ்தானின் பரப்பளவில் மிகப் பெரிய, ஆனால் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமான பலூசிஸ்தானில், கூடுதல் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கோரி பிரிவினைவாதக் குழுக்கள் நீண்டகாலமாக ஆயுதமேந்திய கிளா்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.