பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் பலியானார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் பலியானார்.
Advertisement
Advertisement
மேலும் 7 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் ஆர் எஸ் புரா செக்டாரில் நடந்ததாக அவர் மேலும் கூறினார்.
சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாவதாக இந்தியா-பாகிஸ்தான் அறிவித்திருந்தன.
போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல்!
ஆனால், இப்போது இந்திய எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் ஒருசிலஇடங்களிலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.