FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்கு பருவமழை தொடங்கும்!

தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்...

11 மே 2025, 5:30 am IST
கோப்புப்படம்
பகிர்:

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4  நாள்களுக்கு முன்னதாக மே 27-ஆம் தேதியே தொடங்குவதற்கு சாதக சூழல்கள் உள்ளது.

6 இடங்களில் வெயில் சதம்: சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

Advertisement

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக  மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம், ஈரோடு - தலா 103.28, பரமத்திவேலூா் - 103.1, பாளையங்கோட்டை - 102.2, திருத்தணி - 101.48, திருச்சி - 101.3, தருமபுரி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்தது.

மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) முதல் மே 13-ஆம் தேதிவரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி வெப்பம் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments