சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!
தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது குறித்து...
தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 20) தெரிவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
மே 24 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
எனினும், வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (20-05-2026) மற்றும் நாளை (21-05-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை (102 - 104 ஃபாரன்ஹீட்) ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பதிவான வெப்பநிலை அளவு குறித்தும் வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரங்களுடன் குறிப்பிட்டுள்ளது.
11 இடங்களில் சதமடித்த வெய்யில்
புதன்கிழமையான இன்று (மே 20) அதிகபட்சமாக சென்னை விமான நிலையம், திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சென்னை நுங்கம்பாக்கம் 102.38, வேலூர் 101.66, மதுரை 100.4, பரங்கிப்பேட்டை 99.68, புதுவை 99.68, கடலூர் 98.96, திருப்பத்தூர் 98.78, தருமபுரி 98.78, நாகை 98.6 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Chennai and Thiruthani record temperatures of 104 degrees Fahrenheit
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.