முகப்பு
இந்தியா

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

பிகாரில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலியாகினர்.

Updated On : 11 ஏப்ரல் 2026, 9:40 pm IST
விபத்து - கோப்புப்படம்.
பகிர்:

பிகாரில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலியாகினர்.

பிகார் மாநிலம், கதிஹார் மாவட்டத்தில் பேருந்து, லாரி மற்றும் பிக்கப் வேன் சனிக்கிழமை மாலை ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

கதிஹாரின் கோதா மண்டலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-31-ல் மாலை 6:30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஷிகர் சௌத்ரி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

பிக்கப் வேனில் பயணித்தவர்கள் அருகிலுள்ள பூர்னியா மாவட்டத்திலிருந்து வந்துகொண்டிருந்தனர் என்றும், பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார் என்றும் உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். ஓட்டுநர் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மாவட்ட போலீஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்தில் ஏழு பேர் பலியானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில், காயமடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பலியாகினர்.

பலியானவர்களின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிய முயன்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Ten people were killed and 25 others injured following a collision involving a bus, a truck, and a pickup van in Bihar's Katihar district on Saturday evening, a police officer said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.