பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலி
பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர் என்று முதல்வர் சம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர் என்று முதல்வர் சம்ராட் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிகாரின் பல மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை வெள்ளிக்கிழமை பெய்தது. இதில் மின்னல் பாய்ந்து கயா ஜி மாவட்டத்தில் 3 பேர், அவுரங்காபாத்தில் 2 பேர், சரண் மற்றும் ககாரியாவில் தலா ஒருவர் என 7 பேர் மின்னல் பாய்ந்து பலியாகினர்.
இதுகுறித்து முதல்வர் சம்ராட் சௌதரி தனது எக்ஸ் தளத்தில், பலியானர்வர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மறைந்த ஆன்மாக்களுக்கு இறைவன் சாந்தியை அளித்து, இந்தக் கடினமான நேரத்தில் அவர்களது குடும்பங்களுக்கு மன வலிமையைத் தரட்டும் என்று பதிவிட்டிருந்தார்.
Advertisement
Advertisement
மோசமான வானிலையின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, மின்னல் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பல மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கான கணக்கெடுப்பை நடத்துமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
At least seven people died due to lightning strikes across Bihar on Friday, Chief Minister Samrat Choudhary said.