முகப்பு
உலகம்

வெனிசுவேலா நிலநடுக்கம்: 3,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,500-ஐ கடந்தது பற்றி...

Updated On : 7 ஜூலை 2026, 6:47 pm IST
வெனிசுவேலா நிலநடுக்கம்... - AP
பகிர்:

வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளது.

வெனிசுவேலா நாட்டில் ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்தப் பேரிடரால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாகவும், 16,740 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 30,000 பேர் மாயமானதாகவும் மற்றும் 17,854 பேர் தங்க இடமின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் வெனிசுவேலா நாட்டுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பின. சில நாட்டின் ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அங்கு முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

The death toll from the powerful earthquakes in Venezuela has risen to 3,535.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments