வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி ட்வீட்
குடும்பத்தில் உள்ள பெண்களை நினைத்து, மனசாட்சியோடு சிந்தித்து செயல்படுங்கள் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நினைத்து மனசாட்சியோடு சிந்தித்து செயல்படுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தவும், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கவும் வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீது இன்று மாலை வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
வியாழக்கிழமை முதல் மக்களவையில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்,
Advertisement
Advertisement
உங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களை நினைவுகூர்ந்து, உங்கள் மனசாட்சியைச் சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள். சட்டப்பேரவைகள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத் திருத்தம், நம்முடைய நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் நீதி கிடைப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
நம்முடைய நாட்டின் மகளிர் சக்திக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதை தடுக்க வேண்டாம். இந்த சட்டத்திருத்தம் எதிர்ப்பில்லாமல் நிறைவேற்றப்படுவது நம்முடைய நாட்டின் பெண்கள் புதிய சக்தி பெறவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் உதவும்.
வரலாறு படைக்க இன்று நாம் ஒன்றிணைவோம். நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் தங்களுடைய உரிமையைப் பெறுவதை உறுதி செய்வோம். நாரி சக்தி வந்தன் அதிநியம் சட்ட மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இது நேற்று நள்ளிரவு 1 மணி வரை நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. தற்போது மகளிர் உரிமையைப் பெறும் நாள் வந்துவிட்டது.
பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கப்பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களுக்கும் விவரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
நன்கு பரிசீலித்து உணர்வுப்பூர்வமாக முடிவெடுத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களியுங்கள். பெண்களின் சார்பாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன், பெண்கள் சக்தி என்ற உணர்வை புண்படுத்தும் வகையில் எதையும் செய்துவிடாதீர்கள். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் கவனமும் நம்முடைய நோக்கம், நம்முடைய முடிவை நோக்கியே உள்ளது. நாரி சக்தி வந்தன் அபிநியம் மசோதாவுக்கு ஆதரவு அளியுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார்.
I would say to all the Members of Parliament... Keeping in mind the memory of your mother, sister, daughter, wife in your home, listen to your conscience.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.