தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களை சந்தித்தது பற்றி...
பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) சந்தித்தார்.
இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (என்எஸ்ஏ) மாநாடு, தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தியா சீனா, ரஷியா உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பிரிக்ஸ் நாடுகளுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி.
மாறிவரும் உலகச் சூழலில், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பயங்கரவாதம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சவால்களை எதிர்கொள்வதிலும் பிரிக்ஸ் அமைப்பு ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்தியாவின் தலைமைத்துவமானது, நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Prime Minister Narendra Modi met the leaders at the BRICS National Security Advisors' meeting on Tuesday (June 23).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.