முகப்பு
இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!

பதவிநீக்க தீர்மான நோட்டீஸை மீண்டும் கொண்டுவர எதிா்க்கட்சிகள் திட்டம்...

Updated On : 18 ஏப்ரல் 2026, 10:05 pm IST
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - Center-Center-Chennai
பகிர்:

புது தில்லி : இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகாா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே கொண்டு வந்த தீர்மான நோட்டீஸ் இரு அவைகளிலும் அவைத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது. ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரும் தீா்மானம் தொடா்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மக்களவையில் அளித்த நோட்டீஸை அவைத் தலைவா் ஓம் பிா்லாவும், மாநிலங்களவையில் அளித்த நோட்டீஸை அதன் அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனும் தனித்தனியே நிராகரித்தனா்.

இதையடுத்து, புதிதாக தீர்மான நோட்டீஸ் ஒன்றை நாடாளுமன்றத்தில் மீண்டும் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

summary

Opposition parties planning to move fresh notice in Parliament seeking removal of CEC Gyanesh Kumar: Sources.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.