திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு
திருமலை திருப்பதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.
திருமலை திருப்பதியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது இரண்டாவது நாள் பயணத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை திருமலை திருப்பதி கோயிலுக்குச் சென்றார்.
கோயிலில் ஞானேஷ் குமார் மற்றும் அவரது மனைவிக்கும் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்த அர்ச்சகர்கள் பின்னர் மரியாதையும் அளித்தனர்.
Advertisement
Advertisement
தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயக மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பட்டு வஸ்திரங்களை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும், தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினர்.
உலகின் மிகவும் பணக்கார இந்து கோயிலான திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், ஆந்திரப் பிரதேசத்தின் திருமலை மலையில் அமைந்துள்ளது. இது திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
CEC Gyanesh Kumar on Sunday visited Tirumala temple and offered prayers to Lord Venkateswara as part of his second-day tour schedule, an official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.