முகப்பு
இந்தியா

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:08 PM
நாடாளுமன்றம்
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:05 PM

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.

தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் மசோதா தாக்கலுக்காக 3 நாள் சிறப்பு அமர்வு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கியது. இரண்டு நாள்கள் விவாதத்துக்குப் பின் மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 வாக்குகள் மட்டுமே ஆதரவாகப் பெறப்பட்டன. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

Advertisement

மகளிர் மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேறாமல் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று வந்தே மாதரம் முழு வடிவத்தில் இசைக்கப்பட்டு கூட்டத் தொடர்ந்த நிறைவடைந்தது.

இதன்மூலம், ஜனவரி 28ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

summary

Rajya Sabha recorded 157 hours of business at 110% productivity; Lok Sabha adjourned after women’s quota Bill was defeated in division vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.