அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுப்பு
அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் காணாமல் போன வாக்குச்சாவடி அதிகாரியின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொர்னேலியஸ் கிண்டுவின் சடலத்தை, ரோங்வோங்வே பகுதியில் உள்ளூர் மக்கள் சனிக்கிழமை கண்டனர்.
இதையடுத்து அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.கத்தர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி அதிகாரியான கிண்டு, பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது, உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஏப்ரல் 9-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
Advertisement
Advertisement
பிறகு அன்று முதல் அவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கிண்டு, தனது திபு இல்லத்திற்குச் செல்லாததை அறிந்த அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அந்த வாக்குச்சாவடி அதிகாரியைக் கண்டறிய டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் அதில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.