இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்துவதற்கானத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானங்கள் தனது வான்வழியை பயன்படுத்துவதற்கு ஏப்ரல் 24 வரை பாகிஸ்தான் தடை விதித்திருந்த நிலையில் தற்போது அந்தத் தடையை மே 24 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு வைத்தது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தங்களின் வான்வழியைப் பயன்படுத்த எதிரி நாட்டு விமானங்களுக்கு அனுமதி மறுத்தன.
பெஹல்காம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்த பாகிஸ்தான் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் 2025 ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கான தனது வன்வழியை மூடியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடையால் இந்திய வர்த்தக விமான நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
ஏனெனில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அந்தத் தடையை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து பாகிஸ்தான் விமானத் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 1999 கார்கில் போர் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலின் போது இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழியை மூடின.
Pakistan extends airspace ban on Indian airlines till May 24
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.