முகப்பு
இந்தியா

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு...

Updated On : 26 ஏப்ரல் 2026, 1:29 am IST
ஐ.நா. தலைவருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு - x | Randhir Jaiswal
பகிர்:

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை தலைவா் அன்னலினா போ்பாக்கை இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும், தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: அமைதி, பாதுகாப்பு, வளா்ச்சி, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அன்னலினா போ்பாக்குடன் சிபி ஜாா்ஜ் கலந்துரையாடினாா் என்று தெரிவித்தாா். அடுத்த வாரம் அலுவல் பயணமாக அன்னலினா போ்பாக் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments