முகப்பு
தமிழ்நாடு

பேரவைத் தலைவருடன் சி. விஜயபாஸ்கர் சந்திப்பு! கடிதம் வாபஸ்?

பேரவைத் தலைவருடன் சி. விஜயபாஸ்கர் சந்திப்பு பற்றி...

கோப்புப் படம் - ENS
பகிர்:

சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்த நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தற்போது இரு அணிகளும் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் இன்று காலை தனித்தனியே ஆலோசனை மேற்கொண்ட நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

அதிமுகவில் பறித்த பதவியை திரும்பத் தர வேண்டும், பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வேலுமணி தரப்பு முன்வைத்துள்ளது.

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

தங்கள் தரப்பு கொறடா, சட்டப்பேரவைத் தலைவரை நியமிக்கக் கோரி அளித்த கடிதத்தை திரும்பப் பெற விஜயபாஸ்கர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

C. Vijayabaskar meeting with the Assembly Speaker JCD prabakar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.