அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவரின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளதைப் பற்றி...
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரின் ராஜிநாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக பேரவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து மூன்று பேரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வழங்கியிருந்தனர்.
அவர்களது ராஜிநாமா கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பேரவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகிய மூவரும் மே 25 ஆம் தேதி முதல் தாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்து முறைப்படி கடிதம் அளித்துள்ளனர்.
சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த ராஜிநாமா கடிதங்கள் முறையாக உள்ளதால் அவர்களது கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் மூவரும் முறைப்படி ராஜிநாமா கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து, இவர்கள் மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
ஏற்கனெவே, எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குத் தாவிய நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக 27 எம்.எல்.ஏக்களும், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்களும், வேலுமணி தரப்பில் இருந்து மூன்று பேர் தற்போது தவெகவுக்கும் தாவியுள்ளனர்.
Assembly Speaker J.C.D. Prabhakaran has announced that the resignations of the three AIADMK MLAs from Maragatham Kumaravel, Sathyabama, and Jayakumar have been accepted.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.