முகப்பு
தமிழ்நாடு

ராஜிநாமா ஏற்கப்பட்டாலும் தகுதிநீக்க மனு மீது விசாரணை! பேரவைச் செயலர் பதில்!

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரவைச் செயலர் பதில்...

Updated On : 29 ஜூன் 2026, 4:10 pm IST
சென்னை உயர்நீதிமன்றம் - ENS
பகிர்:

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்திருந்தாலும், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது பேரவைத்தலைவர் விரைவில் முடிவெடுப்பார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவைச் செயலர் பதில் அளித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய 4 பேரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் நடவடிக்கை எடுக்கும் முன்பாகவே அவர்கள் தவெகவில் இணைந்தனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலர் சாந்தி இன்று பதில் மனு அளித்தார். அதில், "அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜிநாமா செய்ததால் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை என்று கூறுவது தவறானது. அவர்கள் ராஜிநாமா செய்திருந்தாலும் தகுதி நீக்க மனுக்கள் பேரவைத் தலைவரால் தொடர்ந்து விசாரிக்கப்படும். ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தகுதி நீக்க மனு மீது குறித்த காலத்திற்குள் அவர் முடிவெடுப்பார். இதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லை'' என்று கூறியுள்ளார்.

இதையடுத்து வழக்கு ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

summary

Speaker will soon make a decision on disqualification petition: Assembly Secretary reply to court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments