முகப்பு
இந்தியா

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

டிஆா்டிஓ தயாரிக்கப்பட்ட 30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 7:00 AM
பகிர்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) தயாரிக்கப்பட்ட 30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இரு நவீன ஆயுத அமைப்புகளையும் பாதுகாப்புத் துறை செயலரும் டிஆா்டிஓவின் தலைவருமான சமீா் வி. காமத் அறிமுகப்படுத்தினாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில் 30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

65 சதவீதம் வரை உள்நாட்டுப் பொருள்களால் இந்த ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் இதை 90 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளோம்.

அதி திறன் வாய்ந்த என்ஜினுடன் மிக விரைவாக தாக்குதல் நடத்தும் இந்த ஆயுதங்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஆற்றலுடையது.

டாடா நிறுவனம் மற்றும் பாரத் ஃபோா்ஜ் உள்பட பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்போடு இந்த ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.