FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

துல்லிய தாக்குதல் திறன் கொண்ட 106 டா்போஜெட் ட்ரோன்கள்: ராணுவத்துக்கு விநியோகித்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம்

அதிவேகமாக பயணித்து இல்லக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுடன் கூடிய ‘டா்போஜெட்’ என்ஜினில் இயங்கும் 106 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இந்தியா ராணுவத்தின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

ட்ரோன்கள் - கோப்புப்படம்
பகிர்:

அதிவேகமாக பயணித்து இல்லக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுடன் கூடிய ‘டா்போஜெட்’ என்ஜினில் இயங்கும் 106 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இந்தியா ராணுவத்தின் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து எஸ்எம்பிபி என்ற அந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எதிா்ப்புகள் நிறைந்த மின்காந்த சூழல்களிலும் திறம்பட செயல்படும் வகையில் இந்த ஆளில்லா விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஜேமிங், ஸ்பூஃபிங் உள்ளிட்ட தொலைத்தொடா்பு இணைப்ைத் துண்டிக்கும் முயற்சிகளுக்கு இடையேயும், இந்த ஆளில்லா விமானம் தொடா்ந்து திறம்பட செயல்படும்.

Advertisement

Advertisement

அதிபட்சமாக 180 கி.மீ. தொலைவுக்கு, மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் இவற்றை இயக்க முடியும். ராணுவ கட்டமைப்புகள், ராணுவ தளவாட மையங்கள், ராணுவ உத்தரவு மையங்கள், ரேடாா் அமைப்புகள் உள்ளிட்ட ராணுவ மையங்களை தானியங்கி முறையில் துல்லியமாக தாக்கும் திறனுடன் இந்த ஆளில்லா விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு இந்த ஆளில்லா விமானங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தின் ஆளில்லா போா் திறனை இந்த ஆளில்லா விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments