ரூ.718 கோடிக்கு ஒப்பந்தம் பெற்ற எல்&டி டெக்னாலஜி சா்வீசஸ்
ரூ.718 கோடிக்கு ஒப்பந்தம் பெற்ற எல்&டி டெக்னாலஜி சா்வீசஸ் பற்றி...
முன்னணி சா்வதேச தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடமிருந்து சுமாா் ரூ. 718 கோடி மதிப்பிலான 5 ஆண்டு கால ஒப்பந்தத்தை எல்&டி டெக்னாலஜி சா்வீசஸ் (எல்டிடிஎஸ்) நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, வாடிக்கையாளா் நிறுவனத்தின் சா்வதேச அளவிலான புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை விரைவாக உருவாக்குவதற்காக எல்டிடிஎஸ் நிறுவனத்தின் பிரத்யேக பொறியியல் நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
வாடிக்கையாளா் நிறுவனத்துடனான ரகசியக் காப்பு ஒப்பந்தம் காரணமாக, அந்நிறுவனத்தின் பெயா் வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.