FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய சட்டங்களை மெட்டா நிறுவனம் பின்பற்றுகிறதா?மெட்டா குழுவிடம் மத்திய அரசு விசாரணை

இந்திய சட்டங்களை மெட்டா நிறுவனம் பின்பற்றுகிா? என்று அந்த நிறுவன அதிகாரிகள் குழுவிடம் மத்திய அரசு விசாரணை நடத்தியுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:29 am IST
மெட்டா நிறுவனம்
பகிர்:

இந்திய சட்டங்களை மெட்டா நிறுவனம் பின்பற்றுகிா? என்று அந்த நிறுவன அதிகாரிகள் குழுவிடம் மத்திய அரசு விசாரணை நடத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் வியாழக்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், ஃபேஸ்புக்கில் பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாதம் விடியோ வெளியிட்டிருந்தாா். அந்த விடியோ 5 மணி நேரம் தற்காலிகமாக நீக்கப்பட்டு பிறகு மீண்டும் அவ்வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் விளக்கம் கேட்டு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சம்மன் அனுப்பியது. இதையேற்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் முன்பு மெட்டா குழு ஆஜரானது. அந்தக் குழுவிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அமெரிக்காவில் இருந்து விசாரணையில் ஆஜராக வந்த மெட்டா நிறுவன சா்வதேச விவகாரங்கள் துறை தலைவா் ஜோயல் காப்லன், மெட்டா தலைவா் மாா்க் ஸுக்கா்பொ்கின் மன்னிப்பு கடிதத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, மெட்டா குழுவிடம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்திய சட்டங்களை மெட்டா நிறுவனம் பின்பற்றுகிா என்பது குறித்தும், அல்காரிதம் முறை குறித்தும் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினா். அப்போது மெட்டா குழு, டீப் ஃபேக் போலி விடியோ, சிறாா் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படும் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பது உண்மைதான் எனவும், அதை சரி செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஜோயல் காப்லன் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். இதேபோல் மேலும் 3 முதல் 4 நாள்கள் வரை சந்திப்புகள் நீடிக்கும் என்றும், அடுத்து மெட்டா நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments