முகப்பு
இந்தியா

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

வினேஷ் சண்டேலுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது பற்றி..

Updated On : 30 ஏப்ரல், 2026 at 12:50 PM
வினேஷ் சண்டேல் - fil photo
பகிர்:

மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஐபேக் இணை நிறுவனரும், இயக்குநருமான வினேஷ் சண்டேலுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்க அரசியல் ஆலோசனைகளை ஐபேக் நிறுவனம் வழங்கி வந்தது. இந்த நிலையில், நிலக்கரி ஊழல் தொடர்பான வழக்கில் ஐபேக் நிறுவனத்தின் இயக்குனர் விக்னேஷ் சந்தலுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஏப்ரல் 13 அன்று அமலாக்கத்துறை சந்தேலைக் கைது செய்தது.

Advertisement

விசாரணைக்குப் பின், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் அவரை 10 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது.

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விக்னேஷ் சந்தேலுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் தில்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

summary

A Delhi court on Thursday granted bail to I-PAC co-founder and director Vinesh Chandel in a money laundering case linked to an alleged coal scam in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.