மலேசியா: பிரதமர் மோடி முன்னிலையில் 800 கலைஞர்கள் நடனம்! சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுமா?
மலேசியாவுக்கு பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து நடன நிகழ்ச்சி நடத்தத் திட்ட
மலேசியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஒன்றாக 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து நடன நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி பிப்ரவரி 7, 8-தேதிகளில் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வா் இப்ராஹிம் முன்னிலையில் 800 நடனக் கலைஞர்கள் சேர்ந்து, தொடர்ச்சியாக 5 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய புலம்பெயர்ந்தோரால் நிகழ்த்தப்படும் பல்வேறு வகையான இந்திய பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனங்களைக் குறிக்கும் ஒற்றை நடனக் கலையில் அதிக எண்ணிக்கையிலான நடனக் கலைஞர்கள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அயல்நாட்டு மண்ணில் இந்திய பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதைக் காண்பிக்கும் நோக்கமாக இந்த நிகழ்ச்சி அமையவுள்ளது.
Advertisement
Advertisement
பரதநாட்டியம், ஒடிசி, கதக், கதகளி, மோகினியாட்டம், குச்சிப்புடி, யக்ஷகானா ஆகியவற்றின் கலவையும், தமிழ், லாவணி, பஞ்சாபி, ராஜஸ்தானி, ஒடியா, பிஹு நாட்டுப்புற மரபுகளின் தாளங்களும் இடம்பெறுகின்றன.
இந்த நடன நிகழ்ச்சியை மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைக்க முயற்சிப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மேலும், நிகழ்ச்சி முடிந்தவுடனேயே அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
800 dancers, One stage: Indian diaspora aims for Malaysia Book of Records during PM Modi's visit
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.