இந்தியாவை உலகுடன் இணைக்கும் தமிழ் மொழி: மலேசியாவில் பிரதமர் மோடி
இந்தியாவை தமிழ்தான் உலகுடன் இணைப்பதாக மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவை தமிழ்தான் உலகுடன் இணைப்பதாக மலேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் பிரதமர் மோடி பேசுகையில், மலேசியாதான் இரண்டாவதாக அதிக இந்திய வம்சாவளிகளைக் கொண்டதாக உள்ளது. இந்தியா - மலேசியாவை இணைப்பதில் பலவும் பங்களிக்கின்றன. அவற்றில் கலாசாரம்தான் எங்களை இணைக்கும் உயிருள்ள பாலம்.
தமிழ்தான், இந்தியாவை உலகுடன் இணைக்கிறது. தமிழ் இலக்கியம் முடிவற்றது; தமிழ்க் கலாசாரம் உலகளாவிய ஒன்று.
Advertisement
Advertisement
இந்திய திரைப்படங்களும் இசையும் மலேசியாவில் பிரபலமாக இருப்பதாக அறிகிறேன். பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஒரு பழைய ஹிந்தி பாடலை பாடிய விடியோக்களும் வைரலாகின.
புகழ்பெற்ற எம்ஜிஆரின் தமிழ்ப் பாடல்களையும் அவர் விரும்புவது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்வதைத் தொடர்ந்து வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil is India’s link to the world says PM Modi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.