முகப்பு
இந்தியா

மணாலி - மண்டி இடையே போலி சுங்கச்சாவடி! இணையத்தில் வைரல்

மணாலி - மண்டி இடையே போலி சுங்கச்சாவடி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:43 PM
போலி சுங்கச்சாவடி
பகிர்:

நாடு முழுவதும் இயங்கி வரும் சுங்கச் சாவடிகளைப் பார்த்து மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் நிலையில், மணாலி - மண்டி இடையே போலியாக சுங்க வரி வசூலிக்கும் நடைமுறை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இமாசலப்பிரதேசத்தில் மணாலியிலிருந்து மண்டி செல்லும் சாலையில், பச்சை நிற பாதுகாப்பு உடை அணிந்துகொண்டு நிற்கும் சிலர், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளை, கட்டாயப்படுத்தி நிற்க வைத்து ரூ.300 வரை வசூல் வேட்டையில் ஈடுபடுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள், ரூ.300 கட்டணம் வசூலிப்பதோடு, அதற்கு ஒரு ரசீதும் போலியாக அச்சடித்து வழங்கி வருகிறார்கள். பொதுமக்களில் ஒருவர் இது பற்றி விடியோ வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகியிருக்கிறது.

Advertisement

அந்த விடியோவில், வேகமாக விரைந்து சென்று கொண்டிருக்கும் தனியார் வாகனங்களை மட்டும் இதுபோன்ற நபர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். அவர்களிடம் ரூ.300 பணமாகப் பெற்றுக் கொண்டு ரசீது கொடுக்கிறார்கள்.

ஒருவர், காருக்குள் இருந்தவாறு அவர்களை விடியோ எடுத்துள்ளார். அவர்கள் காரின் எண்ணை எழுதி ரசீதை முழுக்க நிரப்பி ஓட்டுநரிடம் கொடுக்கிறார்கள். அந்த ரசீதில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முகாம் என்று எழுதப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூ.300 வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தல் செய்தியும் இடம்பெற்றிருப்பதுதான் ஹைலைட்டாக உள்ளது.

இது போலியான சுங்கச்சாவடி என்றும், இவ்வாறு பணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

Information about a fake toll booth between Manali and Mandi has gone viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments