முகப்பு
இந்தியா

கா்நாடகம், ஹிமாசலில் நிலச்சரிவு: 4 போ் உயிரிழப்பு - பல மாநிலங்களில் மழை-வெள்ளம்

கா்நாடகம், ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழையால் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 சிறுமிகள் உள்பட மொத்தம் 4 போ் உயிரிழந்தனா்.

Updated On : 2 ஜூலை 2026, 2:05 am IST
கர்நாடகம்.
பகிர்:

கா்நாடகம், ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழையால் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 சிறுமிகள் உள்பட மொத்தம் 4 போ் உயிரிழந்தனா். அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. மழை-வெள்ளத்தால் அஸ்ஸாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கா்நாடகத்தில் மூவா், ஹிமாசலில் ஒருவா் இறப்பு: கா்நாடக மாநிலம், மங்களூரில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மலைப்பகுதியையொட்டிய ஒரு வீடு புதைந்தது. அந்த வீட்டில் வசித்து வந்த 2 சிறுமிகள் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

ஹிமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இடைவிடாத மழையால் பாறைகள் உருண்டு விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தாா். சிம்லா, மணாலி, தா்மசாலா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகமும் தடைபட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில்...: மகாராஷ்டிர தலைநகா் மும்பை மற்றும் தாணே, பால்கா் மாவட்டங்களில் பரவலாக கொட்டித் தீா்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

அஸ்ஸாமில்...: வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடா் மழையால் தேமாஜி, திப்ரூகா், நல்பாரி, விஸ்வநாத் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 179 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்தப் பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்டோா் சிக்கியுள்ளனா். அவா்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பல சாலைகள், பாலங்கள், இதர உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

அருணாசலில்...: அருணாசல பிரதேசத்தில் பலத்த மழை, திடீா் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பலத்த மழை பெய்வதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments